Monday, October 9, 2017

டெங்கு சில சந்தேகங்கள்

டெங்கு ஏன் தலை விரித்தாடுகிறது ? எப்படி தடுப்பது ?

தமிழகத்தில் இந்த வருடத்தில்  10 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை  டெங்கு பாதித்துள்ளது’ என்கிறது தமிழக  அரசின்  சுகாதாரத்துறை அறிக்கை. டெங்குவை பரப்பும் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களின் திடீர் பெருக்கத்துக்கு,  சமீபத்தில் பெய்த மழையும் ஒரு காரணமாக இருக்கலாம். இதனால், கிராமம், நகரம் பாகுபாடு இல்லாமல்  டெங்குவின் தாக்கம் அதிகரித்துவிட்டது.ஏடிஸ் கொசுக்கள் நன்னீரில்தான் பரவுகின்றன. எனவே, வீட்டைச் சுற்றி மட்டுமல்ல, தேவையில்லாத  இடங்களில் மழை நீர் / குழாய் நீர் தேங்குவதை தடுக்க வேண்டும். டெங்கு கொசு முட்டையிடும் ந ன்னீரில், ஆடாதொடை இலைச் சாற்றை தெளித்துவிட்டால், கொசு முட்டைகள் லார்வா பருவத்திலேயே  அழிந்துவிடும். ஆடாதொடை சாற்றுக்கு அப்படியொரு மகத்தான சக்தியுள்ளது. வீட்டில் நொச்சி செடிகள்  வளர்ப்பது. நொச்சி இலை மணம் கொசுவை விரட்டும். வீட்டில் நொச்சி இலையால் புகை போட்டால்,  டெங்கு கொசு அழிந்துவிடும்.

எப்படி முன் எச்சரிக்கையாக இருப்பது ?

சாதாரணமாக 3 நாட்களுக்க அதிகமான காய்ச்சல், மூட்டுகளில் வலி, தலைவலி, தோல் பாதிப்பு, காய்ச் சல், வாந்தி ஆகியவை இருந்தால் தயங்கிட வேண்டாம். உடனடியாக அருகில் உள்ள அரசு  மருத்துவமனைக்கு சென்று ரத்தப் பரிசோதனை செய்து கொண்டு உடனடியாக சிகிச்சையைத் தொட ங்கிட வேண்டும். .

டெங்குவின் தாக்கம் எப்படி இருக்கும் ?
டெங்குவின் தொடக்கம் காய்ச்சல், தலைவலிதான். பின்னர்  உடல்வலி, தசை அழற்சி அத்துடன் மூட்டு  வலியும் சேர்ந்து முடக்கும். டெங்குவின் தீவிர நிலையில், உடலில் ரத்தத்தில் உள்ள ரத்தத் தட்டுகளின்  எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கில் குறையும். வயிற்றில், நுரையீரலில் நீர்  கோர்க்கும். ரத்த அழுத்தம் குறையும். இதயத் துடிப்பு குறையும். அதிகபட்சமாக கோமாவில் வீழ்த்தி  மரணத்தை உண்டாக்கும். ஆனால், இவை எல்லாம் டெங்குவின் இறுதி நிலைதான்.முன்னதாகவே அதாவது சாதாரண காய்ச்சலாக இருக்கும்போதே டெங்குவை கண்டு பிடித்துவிட்டால்,  உடனடியாக சிகிச்சையைத் தொடங்கி, அதிக பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

பாதுகாப்பு மருந்துகள் எவை எவை ?

மற்ற வைரஸ் நோய்களுக்கு கண்டு பிடிக்க பட்ட தடுப்பு ஊசிகள் டெங்குவிக்கு இது வரை கண்டு பிடிக்க படவில்லை.பாரம்பரிய மருந்துகள் டெங்கு பாதிப்பை குறைக்கும் என்றும் நிலவேம்புக்கு டெங்கு வைரஸ் அடங்கும். ஆய்வுகள் நிலவேம்பில் உள்ள நிலவேம்பு சத்து (andrographiloide) வைரஸ் பல்கி பெருகுவதை டெங்கு தேய்வு நோய் ,ஹெர்பெஸ் போன்ற நோய் தாக்கத்தில் தடுக்கிறது என்பது அறிவியல் ஆய்வுகளில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது .மேலும் வைரஸ் தாக்கத்தில் நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.ஆதலால் பாரம்பரிய அறிவை அறிவியல் பின் புலம் கொண்டு முன் எடுத்து செல்லும் சித்த மருத்துவர்கள் சிபாரிசு செய்த நிலவேம்பு குடிநீர் ஒன்றே பாதுகாப்பிற்க்கான மருந்து ஆகிறது .

டெங்குவிற்கு ஆங்கில மருத்துவம் தேவைபடாது என்று கூற முடியுமா ?
இங்கு எது சிறந்த மருத்துவம் என்ற தர்க்கம் வீண் .நோயாளிக்கோ மருத்துவத்துக்கோ பலன் தராது .டெங்கு தாக்குதல் தீவிரவமானால் தோலில் சிவப்பு நிறமான தடிப்பகள் ஏற்படும். அரிப்பு இருக்கும். ரத்தத் தட்டுகள் அழிவது அதிகரிக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக நீங்கள் அருகில் உள்ள அலோபதி டாக்டரிடம் அனுப்பிவிட வேண்டும். காரணம், டெங்குவுக்கான சிகிச்சை என்பது ஒருங்கிணைந்த ஒரு நடவடிக்கையாகும். இதில் யார் பெரியவர் என்று நினைத்து, காத்திருக்கக் கூடாது. மனித உயிர் விலை மதிப்பு இல்லாதது. அதை பாதுகாக்க சரியான நேரத்தில் செயல்பட வேண்டும்.  டெங்குவை தடுப்பதில் டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்களுடன் மக்களுக்கும் பங்குண்டு. இதை புரிந்து கொண்டால் போதும். டெங்கு ஓடிவிடும்’ என்றார்.

நிலவேம்புக்குடிநீர் காய்ச்சலை குறைக்குமா ? நச்சு தன்மை உடையதா ?

நிலவேம்புக்குடிநீர் காய்ச்சலை குறைக்கும் காய்ச்சலுடன் தொடர்புடைய உடல் வலியை நீக்கும் என்பதையும் அறிவியல் ஆய்வுகளும் எலிகள் மேல் நடத்தப்பட்ட ஆய்விலும் நிரூபணம் ஆகியுள்ளது .அறிவியல் சஞ்சிகைகள் இதனை பதிப்பித்து உள்ளன .விலங்கு பரிசோதனையில் 2000 மில்லி கிராம் வரை பாதுகாப்பானது என்று உடனடி நச்சு ஆய்வுகள் நிரூபித்து உள்ளன .

ஆனால், கசாயம் எப்பிடி செய்வது. நீரை சுருக்கி, மோரைப் பெருக்கி குடி என்பார்கள். நீரை காய்ச்சுதல்  என்பது மரபு. தேவையான அளவு நிலவேம்பு பவுடரை எடுத்து அதை நீங்கள் கசாயம் செய்து சாப் பிடலாம். ஒரு நபருக்கு 5 முதல் 10 கிராம் பவுடர் கணக்கிட்டு கசாயத்துக்கு எடுக்கலாம். சரி, எப்படி க சாயம் செய்வது? பலருக்கு இதில்தான் குழப்பம். 300 மிலி நீரில் 25 முதல் 30 கிராம் பவுடரை இட்டு கா ய்ச்ச வேண்டும். அது பாதியாகும் வரை நன்கு கொதிக்க வைத்து, வடி கட்டி அருந்திட வேண்டும். ஒரு  நாளைக்கு 2 அல்லது 3 முறை கசாயம் அருந்தலாம். காய்ச்சிய கசாயத்தை நீண்ட நேரம் வைத்திருக்கக்  கூடாது. ஓரளவு குடிக்கும் பதத்துக்கு வந்தவுடன் குடித்துவிட வேண்டும். ஒரு வயது நிறைவடைந்த  குழந்தைகள் முதல் அனைவரும் இந்த கசாயத்தை அருந்தலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும் அளவை  குறைக்க வேண்டும். மற்றபடி இதனால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. இது இயல்பான வழிமுறை.


ரத்த தட்டு அணுக்களை கூட்டுவது  எப்படி ?
சிலருக்கு டெங்கு காய்ச்சலின் இரண்டாம் நிலை பாதிப்பு  ஏற்படலாம். அதாவது, காய்ச்சலின் உச்சத்தில் ரத்த இழப்பு ஏற்படும். மூக்கு, வாய் வழியாக ரத்தக் கசிவு  ஏற்படலாம். இது உடலில் ரத்தத் தட்டுகள் குறைவதை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும். ரத்தத்  தட்டுகள் குறைவது நல்லதல்ல. அதிக பாதிப்பை அல்லது உயிரிப்பை ஏற்படுத்தும். ரத்தத் தட்டுகள் குறைவதை தடுக்கும் சக்தி பப்பாளி இலைச் சாறுக்கு உண்டு. ஒரு நாளைக்கு 30 மில்லி  வீதம், 3 நேரம் பப்பாளி சாற்றை எடுக்கலாம். 3 நாட்களில் நல்ல மாற்றம் தெரியும். பப்பாளி இலைச்சாறு  மட்டுமல்ல, தேவைப்பட்டால் ஆடாதொடை சாற்றையும் எடுக்கலாம். ஆடா தொடை சாற்றுக்கு ரத்தத்  தட்டுக்களை பெருக்கம் செய்யும் திறன் உண்டு. இத்துடன் மலை வேம்புச் சாறும் அற்புதமான பலனைக்  கொடுக்கும்.

மனிதர்கள் மேல் மருத்துவ ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதா ?
சித்த மருத்துவ கல்லூரி மற்றும் தேசிய சித்த மருத்துவம் நடத்திய ஆய்வுகள் சஞ்சிகைகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. ஆய்வுகள் நிலவேம்புக்குடிநீர் மற்றும் பிற மருந்துகள் பலன் தருவதை நிரூபணம் செய்துள்ளது .

எல்லா காய்ச்சலும் டெங்குவா ? சுயமாக வைத்தியம் செய்வது முறையா ?
இந்த முறை கூட டெங்கு,பன்றி காய்ச்சல் ,மலேரியா போன்ற வேறுபட்ட காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஆகையால் அருகில் உள்ள சித்த மருத்துவரின் ஆலோசனை மற்றும் அவர் சிபாரிசு செய்யும்  ஆய்வுகூட பரிசோதனை முடிவுகளை கொண்டு டெங்கு என்று உறுதிப்படுத்தி கொள்ளவும் .நிலவேம்புக்குடிநீர் அருகில் உள்ள அரசாங்க அல்லது தனியார் நடத்தும் மருத்துவமனைகளில் உள்ள முறையாக பயிற்சி பெற்ற மருத்துவரிடம் செல்வது பாதுகாப்பு.நோய் நிலை புரிந்து தட்டணுக்கள் தேவைப்பட்டால் ஆங்கில மருத்துவரிடம் அவர்களே சிபாரிசு செய்வார்கள் .டெங்குவுக்கான சிகிச்சை என்பது ஒருங்கிணைந்த ஒரு நடவடிக்கையாகும். இதில் யார் பெரியவர் என்று நினைத்து, காத்திருக்கக் கூடாது. மனித உயிர் விலை மதிப்பு இல்லாதது. அதை பாதுகாக்க சரியான நேரத்தில் செயல்பட வேண்டும்.  டெங்குவை தடுப்பதில் டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்களுடன் மக்களுக்கும் பங்குண்டு. இதை புரிந்து கொண்டால் போதும். டெங்கு ஓடிவிடும்


No comments: